நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் 'பிளையிங் ஸ்குரில்' என்றழைக்கப்படும் அரியவகை அணில்கள் வாழ்கின்றன. அவ்வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகள் வழங்கும் பழங்களை உண்டு அவர்களிடம் அன்பாகவும் பழகி வருகின்றன.
இந்நிலையில் இன்று ஒரு அணில் வெலிங்டன் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. அங்கு விரைந்த வனத்துறையினர் அணிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தைக் கட்டுப்படுத்திச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.