தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், தற்போது சில பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இதனால், குடிநீர் தேவையை மக்களால் சிறிதளவு சமாளிக்க முடிகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனிடையே இன்று மதியம் முதல் கூடலூர், தேவாலா, பந்தலூர் போன்ற பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவருகிறது.
இடைவிடாது காற்று இல்லாத மழை பெய்து வருவதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.