நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மெயின் பஜாரில் நகைக்கடை, அடகுக் கடை, ஜவுளிக் கடை, தங்கும் விடுதி உள்ளிட்ட நிறுவனங்களை மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தனியார் பைனாஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பிரகாஷ்(27) என்பவர், எதிரே உள்ள தங்கும் விடுதி முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் அவருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பிரகாஷ் அலுவலகத்திற்கு சென்றுவிட்டார்.
அடியாட்களுடன் அதிமுக பிரமுகர்
இதையடுத்து, தங்கும் விடுதி உரிமையாளரும், உதகை அதிமுக இளைஞர் பாசறை தலைவர் மோகன்(46), அவரது அடியாட்களுடன் இணைந்து, பைனாஸ் நிறுவனத்திக்குள் நுழைந்து பிரகாஷை கடுமையாக தாக்கினர். இதில் நிலைகுலைந்த பிரகாஷ், தற்போது உதகை தலைமை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மாவட்ட கணணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்
இதுகுறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் முதல் தகவல் அறிக்கையை காலதாமதமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பிராகஷை தாக்கியவர்கள் அதிமுக பிரமுகர் என்பதால், காவல்துறையினர் கைது செய்யாமல் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பிராகஷின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, சம்பந்தபட்டவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என, புகார் அளித்தனர்.