நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை அருகே பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளன. தற்போது புலிகள் காப்பகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது.
இதனால் இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். இந்நிலையில் பந்திப்பூர்-உதகை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரே நேரத்தில் நான்கு புலிகள் கம்பீரமாக நடந்து வந்த காட்சியைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் காணொலி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
பொதுவாக ஒரு புலி அல்லது இரண்டு புலி என தனித்தனியாக பார்க்கும் நிலையில் ஒரே இடத்தில் நான்கு புலிகளைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.