ETV Bharat / state

கேமராவில் சிக்கிய புலி - தேடுதல் வேட்டையில் வனத்துறை

முதுமலை போஸ்பாரா பகுதியில் புலி சுற்றித்திரிவதை கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அறிந்த வனத்துறையினர் புலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கேமராவில் சிக்கிய புலி
கேமராவில் சிக்கிய புலி
author img

By

Published : Oct 12, 2021, 8:33 PM IST

நீலகிரி: மசினக்குடி, கூடலூர், தேவர்சோலை உள்ளிட்டப் பகுதிகளில் நான்கு மனிதர்கள், 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிக்கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் 18ஆவது நாளாகத் தேடி வருகின்றனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், நான்கு கால்நடை மருத்துவக்குழுவினர், இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 65 கேமராக்கள், அதி நவீன ட்ரோன் கேமரா எனப் பல வகைகளில் மசினக்குடி வனப்பகுதியில் புலியைத் தேடியும் யார் கண்ணிலும் சிக்காமலும் போக்குக்காட்டி வருகிறது.

பொதுமக்களுக்கு அறிவுரை

இந்நிலையில் இன்று அதிகாலையில் போஸ்பாரா பகுதிக்குப் புலி இருப்பதாகக் கூறிய வனத்துறையினர் 4 குழுக்களாகப் பிரித்து புலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்களை வேலைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.

கேமராவில் சிக்கிய புலி

இதனையடுத்து ஊர்த்தலைவர் சுனில், புலி நடமாட்டம் குறித்து மைக் மூலம் அப்பகுதி மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. இப்பகுதியில் புலி சுற்றித்திரிவதாகவும் அனைவரும் தங்களைப் பாதுகாப்புக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: “t23 புலி ஆட்கொல்லி புலி இல்லை”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.