நீலகிாி மாவட்டத்தில் சமீபகாலமாக குடியிருப்புப் பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகாித்து காணப்படுகிறது. மேலும், தேயிலைத் தோட்டங்களிலும், நடைபாதைகளிலும் பல்வேறு மக்களை தாக்கியும் வருவதால் காட்டெருமைகளைக் கண்டாலே மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்துவருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர் இல்லாததால் குன்னூர் அருகே உள்ள கேத்தி பிரகாசபுரம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக இரண்டு கண்களும் தொியாத காட்டெருமை ஒன்று குடியிருப்புப் பகுதியிலேயே உலாவந்துகொண்டிருக்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தண்ணீர், உணவளித்துவருகின்றனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், வனப்பகுதிகள் வறண்டுபோயுள்ளதால், இந்தக் காட்டெருமை உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதாகவும், தாங்கள் கொடுக்கும் உணவுகளை உண்டுவிட்டு, மீண்டும் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு சென்றுவிடுவதாகவும் தெரிவித்தனர். இது தங்களை எவ்விதத்திலும் துன்புறுத்துவதில்லை என்ற அவர்கள், காட்டெருமையை செல்லப் பிராணி போல வளர்த்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'அடேய் ஓடுடா ஓடு' - விளைநிலத்தில் புகுந்த காட்டெருமை அட்டகாசம்!