நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள காந்திபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாகவே புலியின் நடமாட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்து புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது புலி ஊருக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளை வேட்டையாடத் தொடங்கியுள்ளது. மேலும் காந்திபுரம் கிராமத்தின் மின்மாற்றி அருகே பசு ஒன்றை புலி அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காந்திபுரம், முள்ளிமலை, கெச்சகட்டி, கெரப்பாடு, தொட்டக் கம்பை உள்ளிட்ட கிராம மக்கள் பீதியில் உறைந்துபோய் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்றனர்.