நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக குன்னூரில் உள்ள பிரதான மார்க்கெட் பகுதி முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு நிவாரண பொருள்கள், காய்கறிகளை வீடு தோறும் வழங்குவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் அத்தியாவசிய பொருள்களான பால், காய்கறி, மருந்து, இறைச்சி போன்றவை முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் குழந்தைகளுக்கு பால் கூட கிடைப்பதில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை, தோட்டக்கலை துறையினருக்கு பொருள்களை வழங்க வேண்டும் என தெரிவித்தும் இதுவரை வழங்காததால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு தேவைப்படும் இன்சுலின் மருந்து கிடைக்காததால் குன்னூர் பகுதி தனித்தீவாக காட்சியளிக்கிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல்முறையாக கை கழுவும் வாகனம் தொடக்கம்!