நீலகிரி மாவட்டத்தில் நெகிழி தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமானது சுற்றுலாப் பயணிகளிடையே நெகிழி கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைத்துள்ளது. இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் கல்லட்டி மலைப்பாதையில் அதிகமாக பிற மாநில சுற்றுலாப் பயணிகள் வருவதால், ஆங்காங்கே நெகிழிக் குப்பைகளை வீசி செல்கின்றனர்.
மலைப்பாதையில் உள்ள நெகிழிக் குப்பைகளை அகற்றும் பணி வாரத்துக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லட்டி முதல் வாழைத்தோட்டம் வரையில் உள்ள சாலைகளிலிருந்த நெகிழிக் குப்பைகளை வனத் துறை ஊழியர்கள் அகற்றினர்.
இதையும் படிங்க: தருமபுரியில் 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி!