நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பணம், பரிசுப்பொருள்கள் கொண்டுவருவதைத் தடுக்கும்வகையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்க 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு அவை பல்வேறு இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றன.
குன்னூர் தொகுதியில் மூன்று பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பேரட்டி, பாரத்நகர், கரன்சி உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட அரசின் விலையில்லா கோழிகள் விநியோகம் செய்யப்பட்டுவந்தது.
தகவல் அறிந்ததும் தேர்தல் பறக்கும் படையினர் விரைந்துசென்று வாகனங்களைப் பிடித்து விநியோகத்தைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து குன்னூர் வருவாய் கோட்ட அலுவலகம் கொண்டுவரப்பட்ட வாகனம் பண்ணைக்கே அனுப்பிவைக்கப்பட்டது.
வருவாய் கோட்ட அலுவலகம் கொண்டுவரப்பட்டு வழக்குப்பதிவு செய்து, கோழிகள் அடங்கிய வாகனத்தைப் பறிமுதல் செய்யாமல் மீண்டும் பண்ணைக்கே அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.