நீலகிரி: குன்னூரில் டேன்டீயில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க தேவையான 29.38 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.
இதனால் 1,066 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 101 ஒய்வு பெற்ற ஊழியர்கள் 3,800 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 212 ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
இந்நிலையில் குன்னூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் க. இராமசந்திரன் தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கினார்.
இந்த நிகழ்சியில் டேன்டீ யின் இயக்குனர் மஞ்சுநாதா மற்றும் வனச்சரகர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மேயர் பத்தி பேசியதை ஏற்கனவே டிவில போட்டுட்டான்; அமைச்சர் நேரு கலகல பேச்சு