ETV Bharat / state

வாகனத்தைத் தாக்க துரத்திவந்த யானை..! - மசினகுடி அருகே பரபரப்பு

நீலக்கிரி: உதகை அருகே யானை ஒன்று வாகனத்தைத் தாக்க துரத்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானை
author img

By

Published : Jun 26, 2019, 11:54 AM IST

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மசினகுடி, சிறியூர், ஆனைகட்டி, மாயார் ஆகிய பழங்குடியின கிராமங்களுக்கு வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில்தான் செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று கிராம மக்கள் சிலர் வாகனத்தில் சிறியூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்த யானைக் கூட்டங்களில் இருந்து ஒரு யானை, வாகனத்தைத் தாக்கும் நோக்கில் பிளிரிக்கொண்டே நீண்ட தூரம் பின்தொடர்ந்து வந்தது.

வாகனத்தை பின்தொடர்ந்து வந்த யானை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து வேகமாக வாகனத்தை இயக்கி தப்பிச் சென்றனர். மலைப்பகுதி கிராமங்களுக்குச் செல்வோர் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 26-06-19
உதகை அருகே வாகனத்தை நீண்ட தூரம் துரத்தி வந்த யானை. பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி, சிறியூர், ஆனைகட்டி, மாயார் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வனப்பகுதி நடுவே உள்ள சாலையில் தான் செல்ல வேண்டும். பொதுமக்கள் மட்டுமின்றி இங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பழங்குடியின கிராமங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்துகொள்ளவும், வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிறியூர் செல்லும் சாலையோரத்தில் குட்டியுடன் இருந்த யானை கூட்டம் அமைதியான முறையில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தது. திடீரென கூட்டமாக இருந்த யானைகளில் ஒரு யானை மட்டும் அவ்வழியாக வந்த வாகனத்தை தாக்குவதற்காக பிளிரியவாறு நீண்ட தூரம் துரத்தி வந்தது. நீண்ட தூரம் துரத்தி வந்த யானை ஒரு கட்டத்தில் நின்று திரும்பி சென்றது. குட்டியுடன் இருந்ததால் யானை வாகனத்தை துரத்தியது குறிப்பிடத்தக்கது. மற்ற வனப்பகுதியை காட்டிலும் சிறியூர் வனப்பகுதியில் தற்போது யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. எனவே சிறியூர் பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.