நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் மலைப்பாதையை அலங்கரிக்கும் ஸ்பெத்தோடியா மலர்களின் சீசன் ஆரம்பமாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடவு செய்யப்பட்ட இம்மலர்கள் தற்போது மரங்களில் பூத்துக்குலுங்குகின்றன.
ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட இம்மலர்களின் சீசன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் துவங்கியுள்ளது. தும்பரிஜியா என்ற ஆங்கில பெயர் கொண்ட இவ்வகை மரங்கள், சாலையின் இருபுறத்திலும் அழகாக பூத்து குலுங்குகிறது. இம்மரங்களில் உள்ள பூக்கள் அதிகமாக மகரந்தம் சேர்க்கை நடைபெற உதவுகிறது.
இதன் காரணமாக தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை அதிகமாக சேகரிக்கின்றன. ஜூலை முதல் டிசம்பர் வரை இதன் சீசன் காலங்களாகும். இளஞ்சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாக பூத்து குலுங்கும் மலர்கள் சுற்றுலாப் பயணிகளை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிப்பதாகவும் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இம்மலர்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றன.