நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்தில் உள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது.
அப்போது அருகிலிருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்ட முயன்றனர். அதனால் ஓட்டம் பிடித்த கரடி அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
அந்த வேளையில் ஆள்கள் நடமாட்டம் குறைவாகயிருந்ததால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து கரடி அருகிலுள்ள புதருக்குள் சென்றுமறைந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கரடியை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிராமத்திற்குள் புகுந்த கரடியைப் பிடிக்க 5 மணி நேரம் போராட்டம்!