ETV Bharat / state

குன்னூரில் தந்திமாரியம்மன் கோயில் திருவிழா ரத்து! - Thandimariyamman temple festival cancelled in coonoor

நீலகிரி: குன்னூரில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் தந்திமாரியம்மன் கோயில் திருவிழா, கரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Thandimariyamman
தந்திமாரியம்மன் கோயில்
author img

By

Published : Apr 11, 2021, 1:10 PM IST

நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா, ஆண்டுதோறும் கோலாகலமாக 41 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இதில் குறிப்பாகக் கொடியேற்றம், பூ குண்டம், தேர் திருவிழா, முத்து பல்லாக்கு போன்ற நிகழ்ச்சிகள் வானவேடிக்கையுடன் வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் திருவிழாக்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

குன்னூரில் தந்திமாரியம்மன் கோயில் திருவிழா ரத்து

இந்நிலையில், இந்தாண்டு ஆரவாரங்கள் இல்லாமல் சிம்ஸ் பூங்காவிலிருந்து அலங்காரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக வந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குன்னூர் நகர மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஆனால், தற்போது கோயில் திருவிழா நடத்திட தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'மாதவராவ் வெற்றி பெற்றால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.