நீலகிரி மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஊட்டி மலை ரயில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இதில் சர்வதேச அளவிலான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது.
இதனால் கடந்த எட்டு மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின்றி, நீலகிரி மலை ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தற்போது இந்தி வெப் சீரிஸ் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாக, மலை ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளின் சக்கரங்களுக்கு துரித கதியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.
ஒரு நாள் படப்பிடிப்புக்கு மலை ரயிலைப் பயன்படுத்த முன்வைப்புத் தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் சென்னை ரயில்வே நிர்வாகத்தில் செலுத்தப்பட்டுள்ளது. நீண்டநாட்களுக்குப் பிறகு மலை ரயில் இயக்குவது ரயில்வே ஊழியர்கள், மலை ரயில் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ: 6 நோயாளிகள் உயிரிழப்பு!