நீலகிரி மாவட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று உதகை மலை ரயில். பழமைவாய்ந்த இன்ஜின்களால் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆர்வம் காட்டுவர். மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 46.5 கிமீ உள்ள இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் கண்கவர் இயற்கைக் காட்சிகளைக் காணலாம்.
ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மலை ரயில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பராமரிப்புப் பணி நிறைவுபெற்று புதுப்பொலிவுடன் குன்னுார் வந்த மலை ரயில், நான்கு பயணிகள் பெட்டிகளுடன் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் மலை ரயில் சோதிக்கப்பட்டது.
தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மீண்டும் சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் மலை ரயில் இயங்கலாம் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.