நீலகிரி: வால்பாறையில் உள்ள 'டேன் டீ' எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழக தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் தலைமையில் நேற்று (நவ.20) கூடலூர் சுங்கம் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அண்ணாமலை, "கூடலூரில் நடைபெறுவது பாரதிய ஜனதா கட்சியின் கண்டன ஆர்பாட்டமா மாநாடா என்பதுபோல் உள்ளது.
முதன்முதலாக தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கை தலைமன்னார்க்கு அகதிகளாக கப்பலில் அழைத்து செல்லப்பட்டபோது, ஏராளமானோர் உயிரிழந்தனர். பின்னர், சிரிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் மீண்டும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன் டீ பணி வழங்கப்பட்டது.
மத்திய அரசிடம் ஒப்படைக்கட்டும்: ஆனால், கேண்டின் நிர்வாகம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக தமிழக அரசு 5,315 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைப்பதாக கூறியிருப்பது வேதனையடைய செய்துள்ளது. டேன் டீ-யை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக எழுதி ஒப்படைத்துவிடுங்கள்.
டேன் டி கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தால் நிர்வாகத்தை லாபத்தில் கொண்டு செல்வோம். அப்படி கொண்டு சென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவி ராஜினாமா செய்வாரா என சவால் விடுத்தார்.
அதே போல், மின்சாரத்துறை லட்சம் கோடி கடனில் உள்ளது. ஆனால், டேன் டீ ரூ.218 கோடியில் மட்டுமே நஷ்டத்தில் உள்ளது. மின்துறை வேண்டும்; டேன்டீ வேண்டாமா? நான் நீங்களாக இருந்தால், ரூ.14 லட்சம் மதிப்பிலான வீடு தரப்படும் என்றது சொன்னதை ஏற்கமாட்டேன் என கூறினார்.
ஊட்டியில் நடந்த பணிகள் என்ன?: தமிழக வனத்துறை அமைச்சர் அவர் வீட்டு முன் பல ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார். டாஸ்மாக் கடையில் Spring மினரல் வாட்டர் விற்கப்படுகிறது. அது கோபாலபுரத்தின் சொந்த தாயாரிப்பு. தமிழக முதலமைச்சர் டேன் டீ விற்பனையை இப்படி செய்தால் பல கோடி ரூபாய் வருவாய், டேன் டீ ஈட்டும். எந்த ஒரு கட்சியிலும் சுயமரியதை இல்லையென்றால், கட்சி வளராது.
விரைவில் திமுக அமைச்சர்கள் பலர் சட்டையை கிழித்தெறிந்து வெளியே வருவார்கள். இந்த அரசுக்கு நீலகிரி, கூடலூர் மக்கள் மீது அக்கறை உள்ளதுபோல் காண்பிக்கிறது. ஊட்டியில் எந்த ஆக்கபூர்வப் பணிகளும் நடைபெறுவதில்லை.
சினிமா பக்கம் நாட்டமா? ரூ.1,76,000 கோடி ஊழல் செய்து நெஞ்சை நிமிர்த்தி வருகிறார் ஆ.ராசா. சென்னையில் மழையின்போது தமிழக முதலமைச்சர் 'லவ் டுடே' படம் பார்த்துக்கொண்டு, இந்த படத்தை நாம்தான் வாங்கியுள்ளோமா? என தன் மகனிடம் கேட்கிறார். மக்களின் நிலைமை அவருக்கு தேவையில்லை.
மாத ஊதியம்: இலங்கைக்கு சென்று அவர்களுடன் இருந்து மக்களின் இன்னல்களைப் பார்த்து வந்துள்ளேன். தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட பொதுத்துறைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், டேன் டீ நிர்வாகத்தில் மட்டும்தான் தினக்கூலிகளாக, தொழிலாளர்களை வைத்துள்ளது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இன்றும் குறைவான தினக்கூலி வழங்கப்படுகிறது. திட்டத்தினை மாற்றி அவர்களுக்கு மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
டேன் டீ-யில் உள்ள அனைத்து தாயகம் தமிழர்களுக்கு அவர்கள் கோரிக்கையை ஏற்று அனைத்து வசதிகளை செய்யவேண்டும் என பாஜக வலியுறுத்துகிறது.
நீலகிரியில் மக்கள் பிரச்சனைகளுக்கு ஜனவரி மாதம் முதல் மத்திய அமைச்சர்களுடன் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளோம்; தமிழக்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக பாஜக முன்னிற்கும்" என கூறினார்.
இதையும் படிங்க: "சென்னையில் குடிநீர் பிரச்னையே இல்லை, அந்த அளவுக்கு மழை பெய்கிறது" - முதலமைச்சர்