நீலகிரி: குன்னூர் காட்டேரி அருகே நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்றது. இப்பணியில் ராணுவ வீரர்கள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். இந்த பணி நிறைவடைந்துள்ளது. ஹெலிகாப்டர் எஞ்சின் உள்ளிட்ட முக்கிய பாகங்களை எடுத்துச் சென்று லாரியில் ஏற்றி கோவை சூலூர் விமானப்படைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும், விமான விபத்து ஏற்பட்ட இடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு அரசுக்கு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூர் விபத்து: ராணுவ ஹெலிகாப்டர் பொருட்கள் அகற்றும் பணி தீவிரம்!