நீலகிரியில் சத்துணவு ஊழியர்கள் சார்பில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட கோரியும், உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட கோரியும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல், திருச்சி, புதுக்கோடடை, தருமபுரி, ஈரோடு, சேலம், வேலூர், தேனி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்