நீலகிரி மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துவருகிறது. இந்த கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய நான்கு தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக கனமழை காரணமாக நேற்று நீலகிரி மாவட்டத்தில் மூன்று தாலுகாவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.