நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குன்னூர் மகளிர் கல்லூரி மாணவிகள், தேசிய மாணவர் படையினருடன் இணைந்து, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த, விழிப்புணர்வுத் தெருக்கூத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பிரதமரின் 'தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து வண்டிச்சோலையிலிருந்து, குன்னூர் சிம்ஸ் பூங்கா வரை இருசக்கர வாகனத்தில் சென்று இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாணவிகள் நடத்தினர்.
தொடர்ந்து சிம்ஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே, தெருக்கூத்து நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினர். இதில் பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்தும், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் குறித்தும் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினர். மேலும் குப்பையை சாலையில் கொட்டக்கூடாது என்றும், தூய்மை இந்தியா திட்டத்தினை தவறாமல் கடைப்பிடிப்போம் எனவும் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: #SwachhBharat இந்த விருது 130 கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது - மோடி