நீலகிரி: குன்னூர் அருகே கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சாத்தூர், கேத்தி பாலாட, எல்லநள்ளி போன்ற பகுதிகளிலிருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர்.
கடந்த கரோனா நோய்த்தொற்று பாதிப்பின்போது சுகாதார நிலையத்திலிருந்து, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் இங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் கரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட உபகரணப் பொருள்களும் - முகக் கவசங்கள், பிபி கிட்டுகள், சானிட்டரி பாட்டில்கள் இங்கு சேமித்துவைக்கப்பட்டிருந்தன.
நேற்றிரவு (பிப்ரவரி 24) திடீரென இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தில் தீப்பற்றி மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் எரிந்துகொண்டிருந்த தீயை 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அணைத்தனர். மேலும் இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: 'வலிமை' முதல் நாள் வசூல் - ரஜினியை முந்திய அஜித்!