நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வன விலங்குகள்- மனிதர்கள் மோதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. குறிப்பாக வன விலங்குகளிடம் பொதுமக்கள், வன ஊழியர்கள் மோதல்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு வனத் துறை புதியதாக 14 சிறப்பு பயிற்சி பெற்ற வனச்சரகர், வனவர் அடங்கிய தமிழ்நாடு வனத்துறை உயர் அடுக்கு படையை உருவாக்கியுள்ளது.
இவர்கள் மாநிலம் முழுவதும் எங்கெங்கு மனிதர்கள், வனவிலங்குகள் மோதல்கள் நடைபெறும் பகுதிகள் உள்ளதோ, அங்கு நேரடியாகச் சென்று வன விலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும் பொதுமக்கள், வனத்துறையினரை எவ்வாறு காப்பாற்றுவது, வனவிலங்குகளை விரட்டி அடிப்பது எப்படி என்பது பற்றி தத்ரூபமாக முதுமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வன ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
குறிப்பாக வனவிலங்குகள் மத்தியில் மாட்டிக்கொள்ளும் மக்கள், வன ஊழியர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது, காட்டுத்தீ ஏற்பட்டால் அதில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி மீட்பது, யானைகள் மனிதர்கள் இடையே மோதலில் பாதிக்கப்பட்டவர்களை எப்படி மீட்பது ஆகியவை குறித்து தத்ரூபமாக பயிற்சி அளிக்கப்பட்டன.
இதையும் படிங்க: தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு: ஓட்டுநர் கைது