இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், " நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க விரும்பும் மலை ரயில் ஆர்வலர்களின் வசதிக்காக குன்னூர்-ரன்னிமேடு இடையே சிறப்பு மலை ரயிலின் இயக்கத்தைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி குன்னூர்-ரன்னிமேடு இடையே, வழக்கமாக உள்ள ரயில் பெட்டிகளுடன் ஜூன் 3 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை இந்த சிறப்பு மலை ரயில் இயக்கப்படும்.
இந்த ரயிலானது குன்னூரில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு ரன்னிமேடு பகுதியைச் சென்றடையும். மறுமார்க்கத்தில் அங்கிருந்து பகல் 1 மணிக்கு புறப்பட்டு, 2 மணிக்கு குன்னூரை வந்தடையும். இந்த சிறப்பு மலை ரயிலில் பயணிக்க முதல் வகுப்புக்கு ரூ.450-ம், இரண்டாம் வகுப்புக்கு ரூ.320-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன் அனைத்து பயணிகளுக்கும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு பரிசுத் தொகுப்புகளும் வழங்கப்படும்.
இரண்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த மலை ரயிலில் முதல் வகுப்பில் 28 இருக்கைகளும், இரண்டாம் வகுப்பில் 30 இருக்கைகளுமாக மொத்தம் 58 இருக்கைகள் இருக்கும். இதில் பயணிக்க முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைச் சீட்டுகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பினை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.