நாடு முழுவதும் இன்று(நவ.14) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டும், அறுசுவை உணவுகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை உறவினருக்கும் அண்டை வீட்டாருக்கும் வழங்கி மக்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னுார் மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள், மகா தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.
இதில் லட்டு, ஜிலேபி, அதரசம், முறுக்கு, சீடை உட்பட 200 கிலோ இனிப்பு வகைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. தீபாவளியையொட்டி குன்னூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பத்தர்கள் இந்தச் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
மேலும், அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாத விநியோகம், அன்னதானம் நடைபெற்றது.