நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க 19 வகையான நெகிழிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன் நெகிழிக் குடிநீர் குப்பிகள், குளிர்பானங்கள் விற்பனைக்கும் தடை விதிக்கபட்டுள்ளது. இச்சமயத்தில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மது அருந்திவிட்டு குப்பிகளை வன பகுதிகளிலும், பொது இடங்களிலும் வீசிச் செல்கின்றனர்.
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இதனையடுத்து மாவட்டத்தில் பொது இடங்களில் மது குப்பிகளை வீசினாலோ, உடைத்தாலோ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கபடும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் மது அருந்துபவர்கள் திறந்த வெளியில் மது அருந்தக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.