தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் அதிகரித்து வருவதால், பூங்காக்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சோப்பு, சானிடைசருக்கு பதில் பூசக் காய்கள்: பழங்குடியின மக்கள் இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள புதுக்காடு பழங்குடியின கிராமத்தில் ஆதிவாசி மக்கள், சானிடைசர் மற்றும் சோப்புக்கு பதிலாக வனப்பகுதியில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.வனப்பகுதிகளில் உள்ள அரிய வகை மரங்களில் கிடைக்கும் பூசக் காய்களை பழங்குடியினர் சேகரித்து வைத்து வெயிலில் உலர்த்தி பயன்படுத்துகின்றனர். இவற்றை சமவெளிப் பகுதிகளில் உள்ள சில தனியார் சோப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியும் வருகின்றனர். தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பழங்குடியின மக்கள், சோப்பு மற்றும் சானிடைசருக்கு பதில் இவற்றைக் கொண்டு கைகளை கழுவி வருகின்றனர். தற்போது பள்ளிகள் செயல்படாததால், பழங்குடியின குழந்தைகள் விடுமுறைக் காலத்தை பயனுள்ள வகையில் இது போன்ற பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 13 ஆயிரத்தை கடந்த கரோனா!