நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 17ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு பகுதிக்கு மாற்றுமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில் தங்களுக்கு மாற்றிடத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் மாவட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் விரைவில் மாற்று இடம் வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சர்வதேச பெண்கள் மீதான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிப்பு