ETV Bharat / state

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்: மாசு குறித்து ஆய்வு செய்ய மாதிரி சேமிப்பு!

நீலகிரி: குன்னூரில் ஆற்றில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி, மாசு கலந்துள்ள விவரம் அறிவதற்கான மாதிரிகள், மாவட்ட கூடுதல் ஆட்சியர் தலைமையில் அலுவலர்களால் சேகரிக்கப்பட்டது.

sewage mixing directly to the river in coonoor

author img

By

Published : Aug 20, 2021, 8:44 AM IST

நீலகிரி மாவட்டம், குன்னூர், அதன் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் உள்ள நீர் ஊற்றுகளில் இருந்து உற்பத்தியாகும் நீர், சிற்றாறுகளாக, ஆறுகளாக மாறி, பவானி ஆற்றில் கலக்கிறது. அதே நேரத்தில் குன்னூர் பகுதிகளில் உள்ள வீடுகளின் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலந்துவிடப்படுகிறது. இதனால் இந்த நீரை குடிக்கும் வனவிலங்குகளுக்கும், பவானி நீரை பயன்படுத்தும் மக்களுக்கும் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்படும் சுழல்

இந்நிலையில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், வனத்துறையினர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் நேற்று (ஆக.19) ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், மாசு கலந்த ஆற்று நீரை ஆய்வுக்கு அனுப்பவதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மேலும், இங்கு வீடுகளில் இருந்து கழிவுகள் ஆற்றில் கலப்பதைத் தடுக்கவும், நேரடியாக கழிவுகளைத் திறந்துவிடும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி 4 வயது யானை பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.