உதகையைச் சார்ந்த சுந்தர மூர்த்தி, கணேசன், சாமுவேல், ஜிப்சன் ஆகியோர் தங்களது நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார், பரத் ஆகியோருடன் கடந்த 26ஆம் தேதி மதியம் கல்லட்டி நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அவர்களுள் கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் நீழ்வீழ்ச்சியினுள் இறங்கி குளித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.
அதனைக் கண்ட சக நண்பர்கள் உடனடியாக புதுமந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மாயமான சாமுவேல், கணேசனின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரின் உடல்களும் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதனையடுத்து தொடர்ந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடலைக் கண்டுபிடிக்க மாநில மீட்புக் குழு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தும்வரை ஓயமாட்டேன் - பெ மணியரசன்