மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை இயக்கப்பட்டுவரும் ரயிலில் பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பயணித்துவருகின்றனர். யுனெஸ்கோவின் தகுதிபெற்ற இந்த மலை ரயில் பாதையில் பயணத்தை மேற்கொள்ள வெளிநாடு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
கோடை காலங்களில் ரயிலில் பயணம்செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அளவிற்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தச் சிறப்பு ரயிலில் பயணம்செய்யும்போது இயற்கையின் அழகையும், வனவிலங்குகளையும் கண்டுகளிக்க முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சிறப்பு ரயிலில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் பயணம்செய்தனர். மேலும், குன்னூர் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜின், ஓவியங்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு தடுப்பது - ஆசிரியர்களுக்கு பயிற்சி