கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் , கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மேலும், வானிலை ஆய்வு மையம் இம்மாவட்டதிற்கு ரெட் அலர்ட் விடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. இதில், 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று நள்ளிரவு முதல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, மாவட்டம் முழுவதும் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் மழை பெய்யும் போது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாலையில் சரிந்து விழுந்த மரங்கள் - போக்குவரத்து இடையூறு!