ETV Bharat / state

மாணவிக்குத் தாலி கட்டிய இளைஞர்... வீடியோ வைரலானதால் ஓராண்டிற்குப் பிறகு கைது! - school girl marriage video viral

நீலகிரி: குன்னூரில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய காணொலி ஓராண்டிற்குப் பிறகு வைரல் ஆனதை தொடர்ந்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்

school
வைரல் வீடியோ
author img

By

Published : Mar 20, 2021, 11:05 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு, இளைஞர் ஒருவர் தாலி கட்டும் காணொலி கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தக் காணொலி பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகம் வரை புகார்கள் சென்ற நிலையில், ஊட்டியில் உள்ள சமூக நலத்துறையினர் குன்னூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்

இதையடுத்து, வீடியோவில் தாலி கட்டிய இளைஞர் குறித்துக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதில், அந்நபர் சட்டன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த கெளதம் (23) என்பதும், கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது.

மேலும், பள்ளி மாணவியையும் கண்டுபிடித்த காவல் துறையினர், இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர்கள் விசாரணை நடத்தினர்.

student
இளைஞர் கைது

தொடர்ந்து, குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார். ஊட்டியில் உள்ள காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: கையில் வில், அம்பு.. கழுத்தில் நூல்கண்டு மாலை.. வேட்புமனு தாக்கல் செய்த சிவசேனா வேட்பாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.