நீலகிரி: கோடநாடு அலுவலகத்தில் சொத்துகள் முடக்கம் செய்வது தொடர்பாக அலுவலக வளாகத்தில் வருமான வரித் துறை அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர்.
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் வருமானவரித் துறை அலுவலர்கள் கோடநாடு அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது, இரண்டு மணி நேரம் உள்ளே ஆய்வு மேற்கொண்ட பின்னர், அலுவலக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டினர்.
அதனையடுத்து அலுவலக வளாகத்தில் ஒட்டிய நோட்டீஸ் குறித்தும், அதற்குண்டான விளக்கத்தையும் ஒலி பெருக்கி மூலம் அலுவலக ஊழியர்களுக்கு அறிவித்தனர். பின்னர் வருமான வரித்துறை அலுவலர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.