ETV Bharat / state

7 வருடங்களுக்குப் பிறகு சசிகலா கோடநாடு வருகை.. ஜெயலலிதாவிற்கு சிலை, மணிமண்டபம் எழுப்ப பூமி பூஜை! - கோடநாடு பங்களா

Sasikala in Kodanad: கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு கோடநாடு பங்களாவிற்கு வந்த சசிகலா, அங்கு ஜெயலலிதாவிற்கு சிலை மற்றும் மணிமண்டபம் எழுப்புவதற்காக பூமி பூஜை செய்தார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 1:30 PM IST

7 வருடங்களுக்குப் பிறகு சசிகலா கோடநாடு வருகை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு பங்களாவிற்கு, கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு சசிகலா நேற்று மாலை வந்தார். இந்த நிலையில், இன்று காலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை மற்றும் மணிமண்டபம் எழுப்புவதற்கான பூமி பூஜையை சசிகலா செய்தார். முன்னதாக, நிருபர்களிடம் பேசிய சசிகலா, “7-9 வயதில் தனது குழந்தை பருவம் முடிந்து விட்டது எனவும், ஆனால் அந்த நாட்களை எனக்கு திரும்ப ஞாபகப்படுத்துவது இந்த கோடநாடுதான் என ஜெயலலிதா கூறுவார்.

கோடநாடு ஜெயலலிதாவிற்கு பிடித்த இடம். எங்கள் இரண்டு பேர் மீதும் தொழிலாளர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள். இங்குள்ள தொழிலாளர்களை நாங்கள் தொழிலாளர்களாக பார்க்கவில்லை, குடும்பமாக பார்த்தோம். ஜெயலலிதா வரும்போது தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்திற்கேச் சென்று பேசுவோம். அது போன்று சகஜமாக ஜெயலலிதா இங்கு வாழ்ந்துள்ளார்.

பொதுவாக குடும்பத்தில் ஒரு பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் கோடநாட்டில் ஜெயலலிதா இருப்பார். வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏன் செல்வதில்லை என கேட்பார், இங்கு கோடநாடு உள்ளது, இதை விட பெரியது எதுவும் இல்லை என்பார் ஜெயலலிதா. அவரின் விருப்பப்பட்ட இடம் இது, அதனால் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது நான் பெங்களூரில் இருந்து வந்த பிறகு நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஜெயலலிதாவும் மறைந்துவிட்டார், நானும் வரவில்லையே என இங்குள்ள தொழிலாளர்கள் ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை பார்க்க வேண்டுமென்றும், ஜெயலலிதாவிற்காக இன்று நல்ல நாள், நல்ல விஷயத்தை துவங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கு வந்துள்ளேன். காலம் காலத்திற்கும் மனிதர்கள் வாழும் வரை இந்த இடம் அவருக்கான இடம். இது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். அதனால் இந்த இடத்தை தேர்வு செய்து, ஜெயலலிதாவின் சிலை, மணி மண்டபத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த வீட்டிற்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு பக்கம் திரும்பும்போது ஜெயலலிதா என் உடன் இருப்பது போல் உணர்கிறேன். அவரோடு இருப்பதை போல் நினைத்து நான் இருக்கிறேன். அதையும் தாண்டி அவருக்காக நிறைய செய்ய வேண்டும். எனவே, அதை எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்திருக்கிறேன். அனைவரும் இங்கு வந்து ஜெயலலிதாவைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருக்கு சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: "அதிமுக பொதுக் குழு தீர்மானங்களில் தலையிட முடியாது" - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.