நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அருவங்காடு தொழிற்சாலையில் வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கு உத்தரவால் அந்தத் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சானிடைசர் உற்பத்தி செய்து தர இந்துஸ்தான் லேடெக்ஸ் லிமிடெட் (எச்.எல்.எல்) மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்தது.
அதனடிப்படையில், குளிரான காலநிலை கொண்ட நீலகிரியில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் 13,000 லிட்டர் ஹேண்ட் 'சானிடைசர்' தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு எட்டாயிரம் லிட்டர் சானிடைசர் அனுப்பப்பட்டது. அடுத்தகட்டமாக நீலகிரியில் எம்.ஆர்.சி., மற்றும் காவல் துறைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிமருந்து தொழிற்சாலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் அலுவலர்கள், ஊழியர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து துரிதமாக செயல்பட்டு மக்களுக்கு சானிடைசர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிவாரணம் வழங்கிய மாணவிகள்