ETV Bharat / state

"சனாதனம் என்பது தொழுநோய், எச்.ஐ.வி போன்றது" - நீலகிரியில் ஆ.ராசா பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2023, 6:00 PM IST

Updated : Sep 7, 2023, 6:09 PM IST

DMK MP A Raja: நிலகிரியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சனாதன தர்மத்தை தொழுநோய், எச்.ஐ.வியுடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆ ராசா
ஆ ராசா

நீலகிரி: நீலகிரி மாவட்ட திமுக வாக்குச் சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் ஊட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான திமுகவினர் கலந்துக்கொண்டர்.

கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, "வரும் நாடாளுமன்றத் தேர்தல் தேசத்தைக் காக்க வேண்டிய தேர்தல், தேசத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு திமுக தலைவர் தோளின் மீது உள்ளது. எனவே, அனைவரும் தேர்தல் பணியைச் சிறப்பாக செய்ய வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பிரதமர் மோடிக்கு ‘இந்தியா’ என்ற பெயராலேயே பயம் ஏற்பட்டுள்ளது. மக்களின் பணத்தை எடுத்து தனிநபருக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். இதுகுறித்து ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியிட்டதும், அதை மறுக்கவில்லை. மாறாக மவுனம் கடைப்பிடிக்கிறார்.

மணிப்பூரில் இன அழிவு ஏற்பட்டும், இதுவரை அதுகுறித்து வருத்தமோ, மன்னிப்போ கூறவில்லை. மாறாக உள்துறை அமைச்சர் அதை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே குரல் எழுப்புகிறார். தேசத்துக்கு ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை ஸ்டாலின் மட்டுமே எதிர்த்து வருகிறார்.

இதையும் படிங்க: கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பயணிகளின் கவனத்திற்கு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு என்ன?

உதயநிதி ஸ்டாலின் கட்சியின் இளைஞர் அணி செயலாளராகவும், அமைச்சராகவும் பொறுப்பேற்றபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை விட டெங்கு, மலேரியா போன்ற நச்சுக் கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு, இதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த கருத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.

இதையும் படிங்க: நீல வான தூய காற்று தினம்: காற்று மாசில் முன்னேறும் இந்தியா.. ஓர் ஆண்டுக்கு உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தச் சிந்தனை போதும், இன்னும் நூற்றாண்டுகளைக் கடந்தும் இந்த இயக்கமும் தத்துவமும் தழைக்கும். உண்மையில், சொல்லப்போனால் சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி வைரஸைப் போன்றது. பாரபட்சமின்றி ஒழித்துக்கட்ட வேண்டும்" என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

திமுக எம்பி ஆ.ராசாவின் இந்த பேச்சு தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துக்கள் பதிவிட்டு வருவதோடு அவரை கைது செய்ய வேண்டும் எனவும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: MK Stalin: "உதயநிதி கூறியது குறித்து விவரம் புரியாமல் பிரதமர் மோடி கருத்து" - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!

Last Updated : Sep 7, 2023, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.