ETV Bharat / state

மஞ்சூரிலிருந்து சொந்த ஊருக்கு நடந்துசென்றவர்களை லாரியில் அனுப்பிவைத்த வருவாய்த் துறையினர் - revenue officers sent five men to trichy in lorry who were walking during lockdown

நீலகிரி: மஞ்சூரிலிருந்து திருச்சிக்கு மேட்டுப்பாளையம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்த திருச்சியைச் சேர்ந்த நபர்களை வருவாய்த் துறையினர் அவ்வழியே வந்த வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

revenue officers sent five men to trichy in lorry who were walking during lockdown

author img

By

Published : Apr 27, 2020, 10:55 AM IST

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதிகளில் கட்டட வேலைக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட ஒரு குழுவினர் வந்திருந்தனர். கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமலும், உணவிற்காகவும் தவித்துவந்தனர்.

இதையடுத்து அவர்கள் ஊருக்குச் செல்வதற்கு மஞ்சூர் காவல் நிலையத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தொடர்புகொண்டனர். அப்போது ஊரடங்கு காரணமாக அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காலை மஞ்சூர் பிக்கட்டியிலிருந்து ஐந்து பேரும் திருச்சிக்கு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அவர்கள் 35 கி.மீ. தூரம் வரை நடந்து காட்டேரி பூங்கா வந்தபோது அவர்களைக் கண்ட வருவாய்த் துறையினர் அவ்வழியாக வந்த லாரி, பிக்-அப் வாகனங்களில் ஏற்றி அனுப்பிவைத்தனர். இதனால் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துச் சென்றனர்.

நடந்துசென்றவர்களை லாரியில் அனுப்பிவைத்த வருவாய்த் துறையினர்

இதையும் படிங்க... திருச்சிக்கு நடந்துச் சென்றவர்களை காரில் அனுப்பி வைத்த சார் ஆட்சியர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.