நீலகிரி: உதகமண்டலத்தில் நடைபெற்ற உருளைக்கிழங்கு மற்றும் மலைகாய்கறி விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
உதகமண்டலத்தில் உருளைக்கிழங்கு மற்றும் மலை காய்கறி விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் இன்று(டிச.29) நடைபெற்றது. அதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் இறுதியில் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட நீலகிரி மலை பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளால் அதிகமான விவசாய பயிர்கள் சேதமடைவதாகவும், அதற்கான முழு இழப்பீடு கிடைக்காததால் இனி வரும் காலங்களில் வனத்துறை முழு இழப்பீடு வழங்க வேண்டும், மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை முறையாக தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
இதையும் படிங்க: விதிமீறி பொதுக்கூட்டம்: கே.எஸ். அழகிரி உள்ளிட்ட 1000 பேர் மீது வழக்கு