ETV Bharat / state

பயணிகளை அச்சுறுத்தும் கல்லட்டிப் பாதை : விபத்துகளைத் தடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!

author img

By

Published : Oct 14, 2020, 5:30 PM IST

நீலகிரி : கல்லட்டிப் பாதையில் விபத்துகளைத் தடுக்கும் விதமாக அமைக்கப்பட்டு வரும் ரப்பர் உருளை தடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

nilgiri
nilgiri

நீலகிரியின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலைப் பாதையும் ஒன்று. முதுமலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், கர்நாடகா, கேரளாவிற்கு செல்லும் மக்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். 36 கொண்டை ஊடி வளைவுகளைக் கொண்ட இந்த சாலையை விரிவாக்கம் செய்வதில் பல ஆண்டுகளாக தொய்வு ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் அதிக விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு 36ஆவது வளைவில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததால், சுற்றுலாப் பயணிகளின் வாகனம் இந்தச் சாலை வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டடது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் 36ஆவது வளைவில் தடுப்பு உருளை அமைக்கும் பணி நடைபெற்றது.

கல்லட்டிப் பாதையில் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தற்போது, இந்தப் பணி தடைபட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இந்தச் சாலையில் பயணம் செய்வதால் மீண்டும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உயிர் சேதம் ஏற்படும் முன்பு, விபத்துகளைத் தடுக்கும் உருளைகளை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை விவகாரம்: பிணை கோரிய ரகு கணேஷ் வழக்கு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.