நீலகிரி மாவட்டம் கூடலூர், தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுபாஸ். அப்பகுதியில், காப்பி மற்றும் ஏல தோட்டம் வைத்துள்ளார். வழக்கம் போல் நேற்று தொழிலாளர்கள் பணிக்கு சென்றனர். அப்போது செடியின் அடியில் இருந்து ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. என்வென்று, அருகில் சென்ற பார்த்தபோது செடிகளுக்கு இடையே வளர்ந்து இருந்த புதர்களில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது.
இது குறித்து, உடனடியாக வனத்துறையினருக்கு தொழிலாளர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர், மலைப்பாம்பை கூடலூரில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.