நீலகிரி மாவட்டம் உதகையில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய பொறியாளர் ரத்தினவேல் என்பவர் தற்போது கோவையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது நீலகிரி, கோவையிலிருந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் நவம்பர் 15ஆம் தேதியன்று வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று உதகையில் உள்ள ரத்தினவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
நான்கு மணி நேரம் நடைபெற்றச் சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: சிரித்துக்கொண்டே சிறை சென்ற காவல் உதவி ஆய்வாளர்