ETV Bharat / state

போதைப் பொருள் விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனா கைது! - SERIAL ACTRESS MEENA ARREST

மெத்தப்பெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சீரியல் நடிகை மீனா
கைது செய்யப்பட்ட சீரியல் நடிகை மீனா (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 9:16 PM IST

சென்னை : தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், மெத்தப்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்ததாக சீரியல் நடிகை மீனாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவர் தொலைக்காட்சி நாடகங்களிலும் மற்றும் ஒரு சில சினிமா காட்சிகளிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் தனது நண்பருடன் இணைந்து மெத்தப் பெட்டமைன் என்ற போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் மீனாவைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று ( நவ 9) ராயப்பேட்டையில் உள்ள தனியார் மாலில் பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று விசாரிக்கையில் மீனா பிடிபட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'படிப்பில் தங்கம்'... சென்னையில் போதை பவுடர் தயாரிக்க முயன்ற கும்பலின் அதிர்ச்சி பின்னணி!

பின்னர் மீனாவிடம் விசாரிக்கையில், மீனா முன்னுக்கு பின் முரனாக பதிலளித்ததால், அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில், மீனாவிடம் இருந்து போலீசார் 5 கிராம் மெத்தப்பெட்டமைன் என்ற போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருள் விற்பனையை எவ்வளவு நாட்களாக மீனா செய்து வருகிறார்? இவருக்கு யார் மூலமாக மெத்தப்பெட்டமைன் போதைப் பொருள் வருகிறது? தொலைக்காட்சி நாடக நடிகர்கள், துணை நடிகர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்தாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தொலைக்காட்சி நாடக நடிகை போதைப் பொருள் விற்பனையில் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.