நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனியில் உள்ள முனீஸ்வரர் கோயிலில் அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்திவந்தனர். அங்கு மிகவும் பழமையான நாவல் மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், கோயிலை அப்புறப்படுத்திய தனியார் நபர், அந்த நாவல் மரத்தையும் வெட்டியுள்ளார்.
இது குறித்து வருவாய்துறைக்கு தகவல் கொடுத்தும், கண்டு கொள்ளப்படாததால் ஊர் மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும், மரத்தை வெட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி, வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சுமார் 2 மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின், நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : வெலிங்டனில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்!