நீலகிரி: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட ரிவர் சைடு (RIVER SIDE) பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அங்கு நடைபெற்று வந்த செல்போன் டவர் அமைக்கும் பணியை அவர்கள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, "செல்போன் டவர் அமைத்தால் அதில் ஏற்படும் கதிர்வீச்சால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள். இப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால் செல்போன் டவர் அமைக்க வேண்டாம்.
இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் உத்தரவை அரசு ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் தொடங்கினால், அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம்" என்றனர்.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கும், ஹேட்டர்களுக்கும் மெசேஜ் சொன்ன அஜித் - நினைவுடுத்திய மேனேஜர்!