ETV Bharat / state

ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க பொதுமக்கள் கடிதம் - ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க வேண்டும் என நஞ்சப்ப சத்திரம் மக்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க வேண்டும்

author img

By

Published : Dec 11, 2021, 11:06 PM IST

நீலகிரி: வெலிங்டன் ராணுவ முகாமில் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்கு முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் வந்த ஹெலிகாப்டர், குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட வீரர் ஒருவருக்கு பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் போரின்போது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க வேண்டும்

அதேபோல் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு நினைவுச் சதுக்கம் அமைக்க வேண்டும் என நஞ்சப்ப சத்திரம் மக்கள் குடியரசுத் தலைவருக்கும், ராணுவ தலைமை அலுவலருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: வீரர்களை மீட்க உதவிய கிராம மக்களுக்கு டிஜிபி பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.