ETV Bharat / state

ஹிஜாப் எதிரான தீர்ப்பு : குன்னூரில் இஸ்லாமிய கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் - குன்னூரில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் ஹிஜாபுக்கு எதிரான தீர்ப்பைக் கண்டித்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பி, தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

Protest on behalf of Islamic Federation in Coonoor on verdict against hijab ஹிஜாப் எதிரான தீர்ப்பு குன்னூரில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் எதிரான தீர்ப்பு குன்னூரில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Mar 26, 2022, 8:36 AM IST

நீலகிரி: கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை முதலில் உடுப்பில் உள்ள அரசு பல்கலைக்கழகத்தில் தோன்றியது. இங்கு பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்கு சென்றபோது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின்னர் தொடர்ச்சியாக போராட்டங்கள் வெடித்தன. கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் அமர அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, “பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய மறுத்துவிட்டதுடன், இது இஸ்லாமிய அடிப்படை உரிமைகளில் இல்லை” எனத் தீர்ப்பளித்தனர்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு- கர்நாடக காவலர்களால் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த தீர்ப்புக்கு பல்வேறு இடங்களில் இஸ்லாமிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வி.பி. திடலில் ஐக்கிய ஜமாத் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்திற்கு எதிரான கோஷங்கள் எழுப்பி, தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மௌலவி ரஜாக் பிர்தௌசி, அன்பியா ஆலிமா, இந்தியா திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரதீஸா, திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஷேக் அலாவுதீன் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க : 'ஹிஜாப் எங்களது உரிமை' மணமேடையில் குரல் எழுப்பிய மணமக்கள்..

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.