தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்றான நீலகிரியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் வர அம்மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில்," கரோனா வைரஸ் பரவாமலிருக்க, நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவதாக தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா பயணிகள் வருவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் நாளை மாலைக்குள் மாவட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தங்கும் விடுதிகள் அனைத்தும் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 8 பேர் நலமுடன் உள்ளதாகவும், தொடர்ந்து இவர்கள் கண்காணிக்கப்பட்டுவருதாகவும் தெரிவித்த அவர், கேரளாவிலிருந்து யாரும் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேவிட்-19 அச்சம்: வெறிச்சோடிய உதகை