ETV Bharat / state

அழிவின் விளிம்பிற்குச் சென்ற நீலகிரி தைலம்.. பிரச்சனைகளை விளக்கும் சிறப்பு தொகுப்பு! - Eucalyptus trees that absorb ground water

Eucalyptus oil production sheds in the Nilgiris: நீலகிரி மாவட்டத்திற்கே சிறப்பு சேர்க்கும் யூகலிப்டஸ் ஆயில் எனும் நீலகிரி தைலத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்து வரும் நிலையில், தைலம் தயாரிக்கும் தொழில் அடுத்த தலைமுறையிலும் தொடருமா எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ள நீலகிரி தைலம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 10:02 PM IST

அழிந்து வரும் நீலகிரி தைலம் தொழில்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வாங்கி செல்லும் பொருட்களாக நீலகிரி தேயிலை தூள், ஊட்டி வர்க்கி, ஹோம்மேட் சாக்லேட் ஆகியவை இருந்து வருகிறது. இந்த பட்டியலில் முக்கியம் வகிக்கிறது நீலகிரியில் தயாரிக்கப்படும் "நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் ஆயில்”. இந்த “யூகலிப்டஸ் ஆயில்” நாடு முழுவதும் பிரபலமடைந்த ஒன்று.

இந்த யூகலிப்டஸ் நாற்றுகள் ஆங்கிலேயர்களது ஆட்சிக் காலத்தில், 1848 ல் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. இவை நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடப்பட்டு வளர்க்கப்பட்டன. இதில், 32 வகை நாற்றுகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் வளர்க்கப்பட்டன.

யூகலிப்டஸ் ஆயில் தயாரிப்பில், "தைல கொட்டகை” முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கொட்டகை யூகலிப்டஸ் இலைகளால் அமைக்கப்படவை. மரங்களில் பறிக்கப்படும் இலைகள், உதிர்ந்து கிடக்கும் இலைகள் என, இரு வகை இலைகள் மூலம் இந்த தைலம் காய்ச்சப்படுகிறது.

சுமார் 400 கிலோ இலைகளைக் காய்ச்சும் கொள்ளளவு கொண்ட டிரம்கள், அடுப்பு, குழாய்கள் என அனைத்து வித உட்கட்டமைப்புகளையும் கொண்ட தைலம் தயாரிப்பு கொட்டகை, வீடுகளைப் போல் தோற்றம் கொண்டது. இதனுள்ளே எப்போதும் தைல வாசனையும் இருக்கும். இந்த கொட்டகைக்குள் குறைந்த பட்சம் 22 டிகிரி செல்சியல் வெப்ப நிலையும் நிலவும்.

கடந்த 45 ஆண்டுகளாக நீலகிரி தைலம் தயாரித்து வரும் உண்ணி கிருஷ்ணன் இது குறித்துக் கூறுகையில், “முதலில் இலைகளை டிரம்களில் போட்டு, காய்ந்த இலை, பச்சை இலை என இருவகை இலைகளுக்கு ஏற்ப தேவையான அளவு நீரை ஊற்றி வேக வைப்போம்.

வேகவைத்ததால் வெளியேறும் ஆவி, டிரம்களில் இணைக்கப்பட்டுள்ள குழாய் வழியே கீழ்ப் பகுதியில் உள்ள தொட்டியில் நீராகக் கொட்டும். அந்த நீரில் அடர்த்தி குறைவான தைலம் மிதக்கும். நீரானது, கீழ்ப் பகுதிக்குச் சென்று வெளியேறும்.எஞ்சிய தைலத்தை எடுத்து வடிகட்டி, சுத்திகரிப்பு செய்து விற்பனைக்குத் தயார் செய்வோம். இதில், மூன்று விதமான பணிகளை நுட்பமாகச் செய்தால்தான், தரமான தைலம் கிடைக்கும்,'' என்றார்.

முன்பு, நீலகிரியில் 1500க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் தைல உற்பத்தி கொட்டகைகள் இருந்தன. ஆனால் தற்போது ஆட்கள் குறைவு, கூலி உயர்வு போன்ற காரணங்களால் நலிவடைந்து வரும் இந்த தொழிலில் தற்போது 200க்கும் குறைவான கொட்டகைகள் தான் மிஞ்சியுள்ளன.

நீலகிரி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 180 கொட்டகைகள் மட்டும் தான் இயங்கி வருவதாக, தைல உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். நீலகிரி தைலத்துக்கு நல்ல கிராக்கி இருந்தும் தொழிலாளர் பற்றாக்குறை, சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் தைலம் மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி குறைந்து வருகிறது.

80 கிலோ இலையில், ஒரு லிட்டர் தைலம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த காலங்களில் கொட்டகையில் மாதம் ஒன்றுக்கு 600 லிட்டர் தைலம் உற்பத்தி செய்யப்படும். ஆனால் தற்போது 200 லிட்டர் என்பதே அதிகமாகத் தெரிவதாகக் கூறுகின்றனர்.

நிலத்தடி நீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்கள்: அரசிடம் இருந்து உதவிகள் ஏதும் கிடைக்காததால், தைலம் தயாரிக்கும் தொழில் அடுத்த தலைமுறைக்குத் தொடருமா என்பது சந்தேகம் தான். நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களில் 800 சதுர கி.மீ., அளவுக்கு வனங்கள் உள்ளன.

இதில், சுமார் 150 சதுர கி.மீ., அளவுக்குக் கற்பூர (யூகாலிப்டஸ்) மரங்களும், 100 சதுர கி.மீ., அளவுக்குச் சவுக்கு மரங்களும், மீதமுள்ளவை சோலை, புல்வெளிகளாகவும் உள்ளன.

கற்பூர மரங்களில் பெரிய மரம் சராசரியாக நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். எனவே, அவற்றைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "நோபல் பரிசு பெற மாணவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.